லண்டனில் சுடப்பட்ட தமிழச்சிக்கு விருது!

459 0

உங்களில் பலருக்கு துஷாவை நினைவிருக்கலாம். அவர் 5 வயதாக இருக்கும் போது கடை ஒன்றுக்குள் வைத்து குழு மோதலில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் இவ்வளவு சின்னஞ் சிறிய சிறுமி மீது இதுவரை யாரும் துப்பாக்கியால் சுட்டது இல்லை. இதுவே முதல் தடவை ஆகும். அன் நிலையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பரா மெடிக்ஸ் மருத்துவர்கள். துஷாவை காப்பாற்ற கடுமையாக போராடினார்கள். அவரை வைத்தியசாலை எடுத்துச் சென்றிருந்தால். சில வேளை அவர் இறந்திருப்பார். ஆனால் சுடப்பட்ட கடைக்குள் வைத்தெ அவர் நெஞ்சை வெட்டி, சத்திர சிகிச்சை செய்து. ரத்தப் பெருக்கை அவர்கள் தடுத்தார்கள்.

இந்த வீர தீர செயலுக்காக அவர்களுக்கு நேற்றைய தினம் லண்டன் ITV பெரும் பாராட்டு விழா ஒன்றை எடுத்துள்ளார்கள். இதில் துஷாவும் அவரது தாய் தந்தையரும் கலந்துகொண்டுள்ளார்கள். மருத்துவர்களை கெளவரப் படுத்த , பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவரும். முக்கிய உறுப்பினருமான கமீலா பாக்கர் போல்ஸ் அவர்கள் வந்திருந்தார் என்பது சிறப்பு அம்சமாகும். லண்டனில் இவ்வாறு பலரது உயிரை மிக மிகப் போராடி காப்பாற்றியவர்கள் சிலரே. அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக ITV கெளரவித்து வருகிறது.

அந்த வகையில் அவர்கள் துஷாவையும் பாராட்டியுள்ளார்கள். மிகவும் மனத் தைரியம் மிக்கவர் துஷா என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். துஷாவால் இனி எழுந்திருக்க முடியாது. அவரால் பேச முடியாது. அவர் பழைய நிலைக்கு திரும்புவது சாத்தியம் இல்லை என நரம்பியல் நிபுணர்கள் அப்போது தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த வீரத் தமிழச்சி , இது அனைத்தையும் உடைத்தெறிந்து, தன் நம்பிக்கை ஊடாக தற்போது மிகவும் முன்னேறியுள்ளார்.

Leave a comment