காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று முதல்

219 0

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் தெரிவிக்கின்றது.

மன்னார் பிரதேசத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார்.

உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்வது அவர்கள் அரசாங்கத்திடம் எதிபார்க்கின்ற பதில் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.

இதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நிர்வாக அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்ததுடன், விசாரணை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்பட உள்ளன.

Leave a comment