நாடளாவிய ரீதியில் 4 மணி நேர சுற்றிவளைப்பு, 2051 பேர் கைது – பொலிஸ்

333 0

நாடளாவிய ரீதியில் நேற்று (11) இரவு 11.00 மணி முதல் இன்று (12) அதிகாலை 3.00 மணி வரை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உட்பட மொத்தமாக 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேரும் குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் 151 பேரும் அடங்குகின்றனர். இதுதவிர 571 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Leave a comment