கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததன் குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ரஹ்மானியா வீதி,கிண்ணியா-02 எனும் முகவரியை சேர்ந்த அப்துல் முத்தலிப் ஆர்தீன் வயது(51) எனவும் தெரியவருகிறது.
இவரிடம் இருந்து 150 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் கேரளா கஞ்சாவுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்பு இரு முறை கேரளா கஞ்சா வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மூன்றாவது தடவையாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரனைகளையும் கைது செய்யப்பட்ட நபரையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

