முதல்வர் சீ.விக்கு ஆதரவாக மாவை

230 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை ஒழுங்கமைப்பதுதான் பொருத்தமானது, பல்கலைகழக மாணவர்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையல்ல-

என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் அழுத்திக் கூறியுள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தாம்தான் நடத்தி முடிப்போம் என பல்கலைகழக மாணவர்கள் திடீரென அறிவித்தார்கள்.

வடமாகாண முதல்வரும் ஏட்டிக்கு போட்டியாக கூட்டத்தை கூட்டி தொடர்ச்சியாக நாம் தான் நடத்துவோம் என அறிவித்தார்.

இந்த நிலையில், வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்படும் நினைவேந்தலை குழப்பும் முயற்சியிலும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

 இதன் ஒரு அங்கமாக, கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் தொலைபேசியில் பேசி, தமது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றிரவு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்கள்.

இதன்போது, பல்கலைகழக மாணவர்களின் குழப்ப முயற்சிகளை மாவை சேனாதிராசா கடுமையாக கண்டித்துள்ளார். நினைவேந்தலை வடமாகாணசபையே ஒழுங்கமைப்பது முறையென கூறினார்.

வடமாகாணசபையை அரசாங்கம் கலைக்கலாம், இந்த மாகாணசபையின் ஆயுள்காலம் அடுத்த நினைவேந்தல் நிகழ்விற்கும் நீடிக்காது, அதனால் பல்கலைகழக மாணவர்கள்தான் அதனை ஒழுங்கமைப்பது முறையென மாணவர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், இதனை நிராகரித்த மாவை சேனாதிராசா- பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை கலைக்கும் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்சி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபையே அதை ஒழுங்கமைக்க வேண்டும், மாணவர்கள் யாருடைய தூண்டுதலிலும் செயற்படகூடாதென அறிவுரையும் வழங்கினார்.

Leave a comment