கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- கல்வி இராஜாங்க அமைச்சர் (காணொளி)

452 0

கல்வியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் மாணவர் விடுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் கல்வியற் கல்லூரிகளுக்கு நாலாயிரத்து இருனூறு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன், அடுத்த வருடத்திலிருந்து அதன் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின
முதல் நிகழ்வாக ஆசிரியர் கலாசாலையின் முன்றலில் தேசிய கொடி மற்றும் கலாசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் இராஜாங்க அமைச்சர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் கலாசாலையின் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
கோப்பார் ஆசிரியர் கலாசாலைக்கு நூறு மில்லியன் ரூபா ஆண்கள், பெண்கள் விடுதிகள் அமைப்பதற்கும் 20 மில்லியன் ரூபா கட்டங்களின் திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர், ஆசிரியர கலாசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.