சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஓய்வு பெற்ற சுங்க பரிசோதகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறினார்.
விமான நிலைய சுங்கப் பிரிவிற்குள் நுழைந்து டுபாயில் இருந்து வந்த ஒருவரால் இந்த தங்க ஆபரணங்கள் சந்தேகநபரிடம் வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் கழிவறைக்கு சென்று தங்க ஆபரணங்களை தனது இடுப்புப் பட்டியில் மறைத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து சுமார் 02 கிலோவும் 500 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
65 வயதுடைய ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

