பொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது

227 0

கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இளம் வயதினருக்கு சிகரட்டுக்களை விற்பனை செய்த 2378 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடத்தில் 50,000 இற்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதுவரையில் 44,059 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 43,550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment