பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னலையாகுமாறு அறிவித்தல்!

420 0

பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்தமை குறித்தே இவ்வாறு விசாhணை நடத்தப்பட உள்ளது. வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ள நாளை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னலையாகுமாறு அசாம் அமீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து கொள்கைப் பிரகடன உரையாற்றிய ஆற்றிய விடயங்களை எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்தப் போகின்றார் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ;நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர், எனினும் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு செயலில் காண்பிக்கப் போகின்றீர்கள்? அதனை உறுதிப்படுத்துங்கள் என அசாம் அமீன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment