கடந்த 4 மாதத்தில் இலஞ்சம் பெற்ற 11 முக்கிய புள்ளிகள் கைது- நெவில் குருகே

306 0

இவ்வருடத்தின் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் லஞ்சம் பெற்ற அரச அதிகாரிகள் 11 பேரை கைது செய்ய முடிந்ததாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இந்த 11 பேரில் ஜனாதிபதி செயலக பிரதானியும், அரச மரக் கூட்டுத்தாபன தலைவரும் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் தவிர, கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு ஏற்ப சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.  இலஞ்சம் தொடர்பிலான முறைப்பாடுகள் ஒவ்வொரு நாளும் குவிந்த வண்ணமுள்ளன. கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்தே நாம் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம்.

இலஞ்சம் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் இருப்பின் 1954 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் நெவில் குருகே அறிவித்துள்ளார்

Leave a comment