பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

1678 0

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சில தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் உடல்கள் மிட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிருடன் மிட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் உள்ள மீத்தேன் வாயுவால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Leave a comment