கண்டி திகன பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று பேர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் புஜாபிடிய, அம்பதென்ன மற்றும் கஹவத்த ஆகிய பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பதென்ன பள்ளிவாயல் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் 21, 22 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது

