மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி- கார்களுக்கு ரூ.20 கட்டணம்

6707 0

மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி வருகிற ஜூன் மாதம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் கார்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே மிகவும் நீளமான மணல் பரப்பை கொண்ட கடற்கரை ஆகும். சென்னை மக்களின் பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் காற்று வாங்குவதற்காக வருகிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருபவர்களும், சுற்றுலா பயணிகளும் மெரினா கடற்கரையின் அழகை ரசித்து வருகிறார்கள்.

கடற்கரைக்கு பொது மக்கள் கார், வேன், பஸ், மோட்டார்சைக்கிளிகளில் வந்து செல்கிறார்கள். மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் அவர்களது வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் முதல் வாகனங்களை நிறுத்தும் செய்ய ரூ.20 கட்டணம் பஸ், கார், வேன்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

இதேபோல தி.நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், பாரிமுனையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி ரூ.20 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சென்னையில் 191 கட்டண வசூலிக்கும் இடங்கள் உள்ளன.

தற்போது மின்னணு எந்திரங்கள் மூலம் டிக்கெட்டுகள் வழங்கி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Leave a comment