கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சைக் குழுவினைப் பிரதிநிதித்துவப்படுத்தி மஹியங்கனை பிரதேச சபைக்குத் தெரிவான எட்டு உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவினைப் பிரதிநிதித்துவப்படுத்தி மஹியங்கனை பிரதேச சபைக்குப் போட்டியிட்ட டீ.எம். ஷியாமலி குமாரி திசாநாயக்க, டீ.எம்.தனுஷ்க தர்மரத்ன திசாநாயக்க, ஏ.எம். ஜயவர்தன பண்டார, டபிள்யு.எம். சமன் புஷ்பகுமார, எம்.பீ. வசந்த விக்ரமசிங்க, ஆர்.பீ.எம். சந்ரதாச, ஏ.எம். லலிதா வசந்தி திசாநாயக்க, எச்.பீ. பாஷிலா மதுபாஷினி ஆகியோரே இவ்வாறு சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டனர்.
வண. அலகெட்டியாவே சீலவங்ஷ தேரர், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனெவிரத்ன, மஹியங்கனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கே.பீ. குணவர்தன ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்

