சிலர் ஆடையணிந்து கொண்டு கருத்துத் தெரிவிப்பதில்லை- பாலித

332 0

ஆடைய அணிந்துகொண்டல்ல சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காலையில் கூறியதை மாலையாகும் போது மாற்றிக் கொள்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்பொழுது அவர் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே இவ்வாறு கூறினார்.

தனக்குக் கிடைத்துள்ள அமைச்சை தானே கேட்டு எடுத்தேன். முடியுமானால், செய்வேன். இல்லாது போனால் விஞ்ஞான முறைப்படி கேட்டு விலகிக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment