அரசாங்கம் அமைச்சரவை மாற்றங்கள் மூலம் மட்டுமே தனது செயல் திறனை காண்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனை முன்னேற்ற அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியின்றி அரசாங்கம், சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

