அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு – ஒரு நபர் குழுவிடம் 15-ந்தேதி வரை மனு கொடுக்கலாம்

604 0

அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம் 15-ந்தேதி வரை மனு கொடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறை அரசு செயலாளர் எம்.ஏ.சித்திக் (செலவினம்) தலைமையில் தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது.

கோரிக்கை மனுக்களை நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ.மெயில் முகவரி omc_2018@tn.gov.in வாயிலாகவோ வருகிற 15-ந்தேதி வரை ஒரு நபர் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment