பெண்களை நிர்கதியாக்கியவர் கைது

5699 16

14-1436847385-arrest3-600கட்டார் நாட்டிற்கு பணிபெண்ணாக அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவிற்கு அனுப்பி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மருதானையில் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment