மதுரையில் இந்தியன் வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கீழ ஆவணி மூலவீதியில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
நேற்று வங்கியின் மாடியில் ஊழியர் ஒருவரின் பணி ஓய்வு பாராட்டு விழாவில் சக ஊழியர்கள் பங்கேற்றபோது காசாளர் அறையில் இருந்த ரூ. 10 லட்சத்தை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஊழியர்கள் இல்லாததை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

