தகவல் அறியும் சட்டம்: O/L,A/L, பல்கலைக்கழக பாடவிதானத்திலும், அரச தடைதாண்டல் பரீட்சையிலும்

23731 185

தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான எண்ணக்கரு மற்றும் பாடப்பரப்பு என்பவற்றை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பாடங்களில் உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் ஊடகத்துறை ஆகிய பாடங்களிலும், அரச பணியாளர்களின் தடை தாண்டல் பரீட்சைகளிலும் இந்த விடயதானம் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் கல்வியியல் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பியதிஸ்ஸ ரணசிங்க மேலும் அறிவித்துள்ளார்.

Leave a comment