ஆர்.கே நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

306 0

சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ரூபாய் நோட்டை காட்டி பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களர்களுக்கு 20 ரூபாயை டோக்கன் போல வழங்கி, தேர்தலுக்கு பின்னர் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக டிடிவி தினகரன் அங்கு வந்துள்ளார். அவரது வருகையின் போது பொதுமக்கள் பலர் 20 ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a comment