காவிரி விவகாரம் – தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போராட்டம்: ஜி.கே. மணி

329 0

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போராடும் என்று ஜி.கே.மணி கூறினார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில்துறையில் முன்னோடியாக இருந்து வந்த தமிழகம் தற்போது திறமை இல்லாத ஆட்சியால் பின் தங்கி வருகிறது. வேலையின்மையால் மாணவர்கள் திசை மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பான்பராக், குட்கா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் கோரும் போராட்டத்தில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. தொடர்ந்து போராடும்.

சபாநாயகர் சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை தருவதாக உள்ளது.

தற்போது வெளி வரும் தீர்ப்புகள் நீதித்துறையை பொதுமக்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கு உள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தேர்ச்சி திறன் குறைவாக உள்ளதை நிர்வாகம் சரி செய்ய வேண்டும். கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment