மஹியங்கனை, மாபாகடவெவ, 17ம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் கவிழ்ந்த காரின் உரிமையாளரான பகுதிநேர வகுப்பு ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபர் இன்று காலை மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
நேற்றையதினம் அவரின் கையடக்கத் தொலைபேசி செயற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
எனினும் அவர் தொடர்பான தகவல் எதனையும் சேகரிக்க முடியாத நிலையில், இன்று காலை அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 26ம் திகதி மஹியங்கனை, மாபாகடவெவ, 17ம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் கார் ஒன்று கவிழ்ந்திருந்த நிலையில் அதன் உரிமையாளர் காணாமல் போயிருந்தமை கூறத்தக்கது.

