குளத்தில் குளித்த நபர் மின்னலால் தாக்குண்டு பரிதாப மரணம்!

350 5

இலங்கையின் வடக்கே வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் செட்டிக்குளத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இலுப்பைக்குளத்தில் நேற்று இரவு குறித்த நபர் குளித்துக் கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தில் பலியானவர் 39 வயதுடைய நபர் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment