பொகவந்தலாவ மாவெளி வனபகதியில் சட்டவிராதேமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 18 பேர் இன்று (28) சனிக்கிழமை காலை 05மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர் .
பொகவந்தலாவ, கெம்பியன், ரானிகாடு, பெற்றோசோ, லோய்னொன் ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதாகவும், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைபற்றியுள்ளதாகவும் விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
தலவாக்கலை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த 18 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 18 சந்தேகநபர்களும் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

