மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

26 0

கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலமான கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று காலை மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை உக்குவளை பிரதேசம் பனச்லவத்த கீழ்பிரிவைச் சேர்ந்த 58 வயதான சின்னய்யா செல்வநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி பேராதெனிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.