நிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்

364 0

பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகார் தொடர்பாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி, தன்னை இந்த செயலுக்கு தூண்டியது காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை கைது செய்தனர். கருப்பசாமியை தேடி வந்தனர்.  அருப்புக்கோட்டையை அடுத்த திருச்சுழியில் கருப்பசாமி வசித்த வீடு, அவரது சொந்த ஊரான நாகனாகுளம் போன்ற இடங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரித்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்ட கருப்பசாமி, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி மேலேந்தல் பகுதியில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை கருப்பசாமியை பிடித்து விட்டதாக  தகவல் வெளியான நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment