மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

360 0

வத்தளை பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மதில் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை, ஹெந்தல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment