பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொள்ளும் கூட்டுத்தாபனமாக காணப்படுகின்றது. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விலை மாற்றத்தின் காரணமாக நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நட்டமடைகின்றது. இதன் காரணமாக அடுத்த மாதத்தில் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளது என பெற்றோலிய சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்தார். உலக சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் காரணமாக இந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அடுத்த வருடத்துக்குள் கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இலாபமடையக்கூடிய கூட்டுத்தாபனமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2.3 பில்லியன் ரூபாவை மக்கள் வங்கிக் கும், இலங்கை வங்கிக்கும் அடுத்த வருட காலத்துக்குள் மீள் செலுத்த வேண்டிய கட்டாய சூழல் காணப்படுகின்றது. கூட்டுத்தாபனத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 315 பில்லியன் ரூபா இதுவரை காலமும் கிடைக்கப்பெறவில்லை.
மின்சார சபையானது கடந்த வருடத்தில் மாத்திரம் 50பில்லியன் ரூபா நஷ்டத்தை அடைந்துள்ள சபையாக காணப்படுகின்றது. 53பில்லியன் ரூபாவை கனியவள கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை மின்சார சபை மீள் செலுத்த வேண்டும். அத்து டன் தனியார் மின்சார சபை 12பில்லியன் கடனை மீள் செலுத்த வேண்டும். ஆனால் இந்த நிதி இதுவரை காலமும் மீளக் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் பாவனைகளுக்கு குறைவான அளவிலே கட்டணங்கள் அறவிடப்படுகின்றன என்றார்

