மெரேயாவில் கேம்பிரி தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு

3008 57

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆணின் சடலமொன்றை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரே இவ்வாறு இன்று (22.04.20180) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் தனது குடியிருப்பு பகுதிக்கருகிலுள்ள நீரோடை பகுதியில் குளிக்க சென்றபோதே தவறி வீழ்ந்து மரணமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணபரிசோதகர் சடலத்தை பார்வையிட்டபின்னர் வைத்தியபரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment