ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்

367 0

snapshot-jpgசூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியை தனது தாயாருடன் பாடசாலைக்கு வருமாறு ஆசிரியை தெரிவித்துள்ள நிலையில் மாணவியின் தாயார் தவிர்க்க முடியாத காரணத்தினால் பாடசாலைக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் பொய் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.