பதுளை, மொனராகலை வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம்

516 0

பதுளை மற்றும் மொனராகலை பொது வைத்தியசாலைகளில் நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதமச் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் இடம்பெறும் தேவையற்ற இடமாற்றங்களை நிறுத்தக் கோரியும், வெலிமடை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மேலதி நேர கொடுப்பனவை வழங்கக் கோரியும், வலியுறுத்தி அரச கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புக் காரணமாக ஊவாக மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும், எக்ஸ்ரே உள்ளிட்ட எவ்வித கதிர்வீச்சுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினைத் தொடர்பில் உரியத் தீர்வு வழங்காவிடின், நாளைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் பாரிய வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment