பாதுகாக்கப்பட்ட வனத்தில் கஞ்சா பயிர் செய்கை

258 0

ஹம்பேகமுவ, கல்கொட்டுகந்த பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் பயிர் செய்யப்பட்டு வந்த கஞ்சா தோட்டம் ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புத்தள முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த வனப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கஞ்சா செடிகளையும் தீ வைத்து அழிப்பதற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கொட்டுகந்த வனஜீவராசிகள் காரியாலயம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்

Leave a comment