ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீண்டும் கல்வியமைச்சுப் பதவி

278 0

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கப்பட்டமைக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபருக்கு அவமரியாதை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஊவா மாகாண முதலமைச்சரிடம் இருந்து, மாகாண கல்வி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பல மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கன.

இந்நிலையில் மாகாண கல்வி அமைச்சுப் பதவியை மீண்டும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கியமையானது மிகவும் பிரச்சினைக்குறிய விடயம் என்று ஜே.வி.பி. யின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment