வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியது(காணொளி)

309 0

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியுள்ளது.

வடக்கு கிழக்கு உள்@ராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வவுனியா நகரசபையை, தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராசலிங்கம் கௌதமன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையே வவுனியா நகரசபையை கைப்பற்றுவதில் நிகழ்ந்த அதிகாரப் போட்டிகளின் நடுவே, வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியுள்ளது.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று வடக்கு மாகாண உள்@ராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவிற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இராசலிங்கம் கௌதமனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாகலிங்கம் சேனாதிராசாவும் பிரேரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் இ.கௌதமன் 11 வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சேனாதிராசா 09 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.

வவுனியா நகரசபையின் உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் எஸ்.குமாரசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.

வாக்களிப்பின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவை, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave a comment