வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே!- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி!!

216 0

வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது.

அத­னால், அந்­தப் பத­வி­யைப் பிடுங்­கிக் கொடுப்­பதா அல்­லது தொடர்ந்­தும் தவ­ரா­சா­வையே இருக்க அனு­ம­திப்­பதா என்­பது தொடர்­பில் இழு­ப­றி­நிலை காணப்­ப­டு­கி­றது என்று அறி­ய­மு­டி­கி­றது. அந்­தப் பதவி தமக்­குத்­தான் தரப்­ப­ட­வேண்­டும் என்று ஐக்­கிய சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­தா­க­வும் அறிய முடி­கின்­றது.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லின் பின்­னர் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சியை சேர்ந்த க.கம­லேந்­தி­ரன் (கமல்) பதவி வகித்­தார். அதே கட்­சி­யைச் சேர்ந்த, பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக இருந்த றெக்­க்ஷி­யன் என்­ப­வ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொலை செய்த குற்­றச்­சாட்­டில் கமல் கைது செய்­யப்­பட்­டார். அவர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார்.

குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்­பட்­ட­வு­டன் கட்சி கம­லைத் தூக்கி எறிந்­தது. அவ­ரது உறுப்­பி­னர் பத­வி­யும் பறி­போ­னது. இந்த நிலை­யில், எதிர்க் கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சி­யைச் சேர்ந்த சி.தவ­ராசா பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.

அதன்­பின்­ன­ரும், அவ­ரது கட்­சிக்­குள் ஏற்­பட்ட உள் முரண்­பா­டு­ கள் கார­ண­மாக சி.தவ­ரா­சா­வை­யும் அந்­தப்­ப­த­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியி­னர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர். எனி­னும், சபை­யில் அதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தும் தவ­ரா­சாவே எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பத­வி­வ­கித்து வரு­கின்­றார்.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் சில மாதங்­க­ளில் நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இந்­த­நி­லை­யில் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து தவ­ரா­சாவை நீக்­கி­விட்டு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பா­கப் போட்­டி­யிட்டு வவு­னியா மாவட்ட மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்ள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஜெய­தி­ல­கவை அந்­தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டும் என்று ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் மாகாண உறுப்­பி­னர்­கள், மாகாண சபை­யின் அவைத்­த­லை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் என்று அறிய முடி­கின்­றது.

இது தொடர்­பாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, வடக்கு மாகாண சபை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில் நாம் முயற்சி எடுத்­துள்­ளமை உண்­மை­தான்.இது தொடர்­பாக நாம் கட்சி உயர் மட்­டத்­தி­ன­ரு­டன் பேசி வரு­கின்­றோம். அவைத்­த­லை­வ­ரி­ட­மும் பேசி­யுள்­ளோம். மேல­திக விவ­ரங்­கள் நாம் முடிவு எடுத்த பின்­னரே தெரி­விக்க முடி­யும் – என ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment