சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

7 0

யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில் சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம், சுன்னாகம் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியதில் குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றிக் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டா வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - January 25, 2017 0
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதிப்  பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என்று, உயர்க் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது,…

மாமியை கொன்ற மருமகனுக்கு கடூழிய சிறை

Posted by - October 13, 2016 0
காரைநகர் பிரதேசத்தில் மாமியாரை தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று இந்த…

பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது!

Posted by - May 2, 2018 0
உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்

கிளிநொச்சி சந்தையை அங்கஜன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - September 28, 2016 0
தீயினால் எரிந்த கிளிநொச்சி சந்தைப்பகுதியையும், பதிக்கப்பட்ட வர்த்தகர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கிளிநொச்சி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீவிபத்தினால் பலகடைகள் எரிந்து…

வடமாகாணத்தில் முதலமைச்சர் தலைமையில் அபிவிருத்தி ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 15, 2017 0
வட மாகாணத்தில் மேற்கொள்ளப் படவுள்ள  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில்…

Leave a comment

Your email address will not be published.