கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

5 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஏப்ரல் 16ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை, வரும் 27-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது

Posted by - September 15, 2016 0
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து…

ஜனாதிபதி விருது பட்டியலில் தமிழை புறக்கணிப்பதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 30, 2018 0
சிறந்த மொழிகள் அறிஞர்களுக்கான ஜனாதிபதி விருது பட்டியலில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

Posted by - September 30, 2018 0
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - September 19, 2018 0
பாளை மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலீசாரிடம் இருந்து இரும்பு கம்பிகள், கத்தி மற்றும் அலுமினிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து சசிகலாவிடம் தினமும் தெரிவிக்கப்பட்டது:

Posted by - February 7, 2017 0
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

Leave a comment

Your email address will not be published.