எஸ்.சி., எஸ்.டி. சட்ட தீர்ப்பு விவகாரம் – ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

8 0

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.

இதையடுத்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 6-ந்தேதி அன்று நடந்தது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட அரசு வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் 16-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமெழி, திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Related Post

ஜெயலலிதாவின் சவப்பெட்டி வைத்து ஓ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம்: மு.க ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 7, 2017 0
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவுக்கு 5-வது நாளாக தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted by - September 9, 2016 0
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என…

100-வது நாளை எட்டுகிறது ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்: தீர்வு எப்போது?

Posted by - July 19, 2017 0
நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தாக…

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகா சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பதா?

Posted by - April 5, 2018 0
அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் முன்னோடியாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கர்நாடகா சேர்ந்த ஒருவரை நியமிக்கும் முடிவுக்கு பா.ம.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

Posted by - September 7, 2018 0
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.