கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் – வைகோ குற்றச்சாட்டு

200 0

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் வகுத்து விட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு காலமும் மத்திய அரசு அமைக்காது. தமிழக மக்களை தமிழக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நடத்தும் போராட்டங்கள் எல்லாவற்றையும் அடக்கு முறையை பின்பற்றி அச்சுறுத்தி தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக கேள்விபடுகிறேன்.

எடப்பாடி அரசு மாணவர்கள் மீது அடக்கு முறையை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழகம் கொதி நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும் தமிழக மக்கள் போராடி வருகின்றனர்.

மேகதாதுவில் கர்நாடக அரசை அணையை கட்ட விட்டு மேட்டூருக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவிடாமல் செய்து தமிழகத்தை பாலைவனம் ஆக்க நினைத்து விட்டனர்.

இதனால் இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பா.ஜனதா கம்பெனிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு காவிரி டெல்டாவை விற்க திட்டம் வகுத்து விட்டனர்.

தமிழகத்தை எத்தியோ பியோவாக மாற்ற மத்திய அரசு நினைத்து விட்டது. தமிழகத்தில் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடக்கூடாது. ஹைட்ரோ கார்பன் எந்திரத்தை கொண்டு வந்தால் இளைஞர்கள் திரண்டு எழுந்து உடைத்து எறிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment