சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

13 0

இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை. இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

“யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் எ ன கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண்டாக வேண்டும்.

இங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உ ள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தி ன் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை.

அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக்கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.

இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும். மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.

அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமா ட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன் – என்றார்.

Related Post

பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு

Posted by - January 22, 2018 0
யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;…

வடமாகண சபையில் வாய்தர்க்கம், சபை ஒரு மணித்தியாலம் ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - December 21, 2016 0
வடக்கு மாகாண முதலமைச்சர் லண்டனிற்கு சென்றிருந்த போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்று தெரிவித்த கருக்கு தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன்…

முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்!

Posted by - May 16, 2018 0
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக…

தமிழர்களின் ஏகோபித்த தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பயனில்லை – சந்திரகுமார்

Posted by - April 27, 2018 0
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை முன்னாள் நாடாளுமன்ற…

வாள்வெட்டுக் குழுவினர் அச்சுவேலியில் அட்காசம்!

Posted by - August 14, 2018 0
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.