சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை வழங்க வேண்டி வரும் – ரஷ்யா

228 0

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவின் இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துமாக இருந்தால், சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை தமக்கு வழங்க வேண்டி வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க கூட்டணியின் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து சிரியா மீது தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் மரியா சகரோவா குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a comment