மாலி நாட்டில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ஒருவர் பலி – ஏராளமானோர் காயம்

228 0

மாலி நாட்டில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான மாலியில் தியூரக் தீவிரவாதி களை ஒடுக்க கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட் டுள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

திம்புக்கு விமான நிலையம் அருகே ஐ.நா. அமைதிப்படையின் 2 முகாம்கள் உள்ளன. அங்கு 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கியுள்ளனர். நேற்று அந்த முகாம்கள் மீது தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் வெடிகுண்டு நிரப்பிய 2 கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு கார் வெடித்து சிதறியது. இதுபோன்ற தாக்குதல் களால் அமைதிப்படை முகாமில் இருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்சை சேர்ந்தவர்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாலிநாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 162 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Leave a comment