வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையூறுகள் அதிகமாக உள்ளது!

343 0

வடக்கிற்கும் தெற்கிற்குமான நல்லிணக்கத்திற்கு சமூக,பொருளாதார மற்றும் கலாசார ரீதியான இடையூறுகள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார். வடக்கிற்கும் தெற்கிற்குமான தொடர்பு குறைவாக காணப்படுகின்றது. இரு தரப்புக்களுக்கும் இடையிலான தொலைவின் அடிப்படையிலான இடைவெளி அதிகமாக உள்ளது. எனவே வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து உட்பட்ட விடயங்களிலும் அவதானம் செலுத்தப்படுவது அவசியமாகும் என ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Leave a comment