தலைவர்பிரபாகரன் மீது அதீத ஈர்ப்பு கொண்டுள்ள முஸ்லிம் இளைஞன்!

5332 0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும் என தமிழக சின்னத்திரை நடிகர் மொஹமட் அஷீம் தெரிவித்துள்ளார்.

தான் பிறப்பால் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு மிகவும் பிடித்த புரட்சியாளர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அஷீம் வீழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவன் பிரபாகரனை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளான கலைஞர், சீமான், திருமாவளவன் போன்றோரையும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரை உலகில் அஷீம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். அவர் நடித்த பிரியமானவளே, பகல் நிலவு போன்ற மெகா தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment