வீதி விபத்தில் முதியவர் படுகாயம்!!!

349 0

இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலைய வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது  மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மது போத்தல்கள் கொண்டு சென்றுள்ளதுடன் அவை வீதியில் சிதறிக்கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக  விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment