இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளின் வசதிகளை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் அவசியத்தை கவனத்திற் கொண்டு அம்முழு வேலைத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவில் 85 வீதமான 72.25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஹொங்கொங்கின் HSBC நிர்வனத்திடமிருந்தும் மேலதிக 15 வீதமான12.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை மக்கள் வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்காக கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.(அ)

