தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”தென் அமெரிக்க நாடான சிலியின் தென்மேற்கு பகுதியிலுள்ள கோகுவும்போ நகரத்தில் இந்றி (புதன்கிழமை) அதிகாலை 7.15 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது வீடுகள் குலுங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

