யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா கும்பல்

465 0

யாழ்ப்பாணம் தெலிப்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த குழு ஒன்று இளைஞர் ஒருவர் மீது கூறிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெலிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெலிப்பளை கலைவாணி நூலகத்திற்கு அருகில் நேற்று இரவு 8மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் தெலிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ரவிச்சந்திரன் லக்ஷன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்கள் தன மீது ஒரே நேரத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் நபர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் காயத்திற்குள்ளான இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

Leave a comment