மட்டக்களப்பில் இளம்குடும்பஸ்தர் சடலமாக மீட்பு (காணொளி)

348 0

battiமட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம்குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில், இசைநடனக்கல்லூரி வீதியின் முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் இன்று காலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய வெள்ளைத்தம்பி மகேஸ்வரன் எனவும், அவரது மனைவியான சிந்து மகேஸ்வரன் என்பவர் நஞ்சருந்திய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.